சச்சின் மகள் சாராவுடன் இளம் கிரிக்கெட் வீரர் காதலா? முதல்முறையாக காதல் குறித்து பதிவு
இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான போட்டிகளில் விளையாடி 49 ரன்கள் அடித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சுப்மன் கில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்கள் கவனத்தை ஆண்டுதோறும் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக வெகுகாலமாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இருவரும் சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும் போது ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இதனையடுத்து, இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சுப்மன் கில், நான் இப்போதும் சிங்கிளாக தான் இருக்கிறேன் என கூறி இந்த கிசுகிசுவுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
