இன்றிரவும் நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை

இன்றிரவும் நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.