நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலும் உப்புக்கான தட்டுப்பாடு ஏற்படாது!

நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலும் உப்புக்கான தட்டுப்பாடு ஏற்படாது!

நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலும் உப்பு தட்டுப்பாடு ஏற்படாதென ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த சந்தபரண மீண்டும் உறுதியளித்துள்ளார்.

தீக்கிரையான எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்த இரசாயன பொருட்கள் கடலிலில் கலந்த காரணத்தினால் நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், தீக்கிரையான கப்பலிலிருந்து கடலிலில் கலந்த இரசாயனப் பொருட்கள் காரணமாக உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பல்வேறு தரப்பினர் கூறிவருவதால், கடந்த இரு நாட்களாக மக்கள் பாரிய அளவில் உப்பை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் அளுத்கம, பேருவளை மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அனுமதிப்பத்திரம் பெற்று அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் அதிகளவில் உப்பு விற்பனை செய்யப்படுவதாக எமது நிருபர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் உப்புத் தட்டுப்பாடு இல்லையெனவும், அது குறித்த மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த சந்தபரண தெரிவித்தார்.