மட்டக்களப்பில் 145 பேருக்கு கொரோனா!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 145 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில், 3 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (01) முதல், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அறிவித்துள்ளார்.
இதன்படி, திருச்செந்தூர், கல்லடிவேலூர், பாலமீன்மடு முதலான கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படுவதாக அவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.