அங்கொடை முதியோர் இல்லமொன்றில் 29 பேருக்கு கொவிட்: ஒருவர் உயிரிழப்பு!
அங்கொடை, சிறிபெரகும் வீதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்துவந்த வயோதிபர் ஒருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த இல்லத்திலுள்ளவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அவர்கள் அனைவருக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொதட்டுவ பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 29 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோய் நிலைமைகள் கொண்டுள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.
இதனால் தொற்றுக்குள்ளான வயோதிபர்களை மேற்படி இல்லத்திலேயே தங்க வைத்து சிகிச்சை அளிக்க தீர்மானித்துள்ளதாக கொதட்டுவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.