டெங்கு பரவல் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

டெங்கு பரவல் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில், டெங்கு வைரஸ் பரவல் நிலையும் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் இந்திக்க வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதம் அதிகரிப்பை வெளிப்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.