மாவட்ட ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் விபரம்
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐ அண்மித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இந்த பகுதியில் 608 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரையில் இங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,247 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் 33,360 பேர் கொவிட் தொற்றுடன் மொத்தமாக அடையாளம் காணப்பட்டதுடன், நேற்று அங்கு 547 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேவேளை களுத்துறையில் நேற்று 447 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது.
கண்டியில் 108 பேருக்கும், குருணாகலையில் 99 பேருக்கும், காலியில் 143 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 56 பேருக்கும், கேகாலையில் 136 பேருக்கும் புத்தளத்தில் 42 பேருக்கும், அனுராதபுரத்தில் 39 பேருக்கும், மாத்தறையில் 82 பேருக்கும், பொலனறுவையில் 29 பேருக்கும், அம்பாறையில் 46 பேருக்கும், நுவரெலியாவில் 17 பேருக்கும் நேற்று தொற்று உறுதியானது.
அதேநேரம் இரத்தினபுரியில் 78 பேருக்கும், அம்பாந்தோட்டையில் 50 பேருக்கும், பதுளையில் 43 பேருக்கும், மட்டக்களப்பில் 76 பேருக்கும், மொனராகலையில் 40 பேருக்கும் கிளிநொச்சியில் 57 பேருக்கும், முல்லைத்தீவில் மற்றும் திருகோணமலையில் தலா 31 பேருக்கும் மாத்தளையில் 14 பேருக்கும் வவுனியாவில் 72 பேருக்கும் மன்னாரில் 8 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.