நாட்டில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம்
நாட்டில் நேற்றைய தினம் 2,859 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 2,849 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனையோர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். இதற்கமைய தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 183,425 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,434 பேர் நேற்று குணமடைந்தனர். இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 149,825 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதியான 32,186 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.