எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விவகாரம் தொடர்பான விசாரணை சீ.ஐ.டி கொண்ட குழுவிடம் ஒப்படைப்பு
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் குறித்த விசாரணை சீ.ஐ.டி யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த விசாரணையை முன்னெடுக்க அமைக்கப்பட்டுள்ள சி.ஐ.டி கொண்ட சிறப்புக்குழுவில் 10 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கேப்டன் மற்றும் தலைமை பொறியிலாளரிடமிருந்து பெறப்படும் அறிக்கை இந்த சிறப்புக்குழுவினரிம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.