கடற்படை, கடற்பகுதி வாழ் மக்களுக்கு மீண்டுமொரு அறிவிப்பு

கடற்படை, கடற்பகுதி வாழ் மக்களுக்கு மீண்டுமொரு அறிவிப்பு

நாட்டில் மேற்கு, சப்ரகமுவ ,மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில்லும் இன்று சில வேளைகளில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைகள், வடமேற்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களின் மேற்கு சரிவுகளிலும் அம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் சில நேரங்களில் காற்றின் வேக்கமானது 40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கும்.

நீர்கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரையில் கொழும்பு மற்றும் காலி வழியாக,கடற் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற் பகுதிகளில் சாதாரண வானிலை நிலவும்.

தீவைச் சுற்றியுள்ள கடற் பகுதிகளில் தெற்கே மேற்கு நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

புத்தளம் முதல் மாத்தறை வரை கொழும்பு மற்றும் காலி வழியாக கடற்கரையிலிருந்து கரையோரப் பகுதிகளுக்கு அருகில், 2.0 - 2.5 மீ உயரம் வரை அலைகள் உயரும்.

இலங்கையின் வானிலையில் நிலவும் சீரற்ற தன்மையை கருத்திற்கொண்டு கடற்படை,மீன்பிடி சமூகங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.