மதகு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!
சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கி அமைந்துள்ள தொடருந்து பாதையில் மானுவன்கம பிரதேசத்தில் மதகு ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குறித்த பெண் சிலாபம் - மானுவன்கம, திம்பில்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரைணையின் போது தெரிய வந்துள்ளது.
அந்தப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.