கம்பஹாவில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு

கம்பஹாவில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு

நாட்டில் நேற்று பதிவான தொற்றாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 2,882 கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கம்பாஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இம்மாவட்டத்தில் மாத்திரம் 541 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக கொழும்பு மாவட்டத்தில் 442 பேரும், களுத்துறையில் 241 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 205 பேரும் நேற்று பதிவாகியுள்ளனர்.

மேலும், கண்டி, குருநாகல், காலி, கேகாலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.