நாட்டில் 180,000 ஐ கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் 180,000 ஐ கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 180,000 ஐ கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 2,882 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் 2 827 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளனர். 55 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

இதன்படி மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 180,593 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதியான 30,797 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 2,029 தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவால் நாளாந்தம் வெளியிடப்படும் புதுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 148,391 ஆக அதிகரித்துள்ளது.