சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பதவிகளுக்காக தகுதியுடையவர்களை நியமிக்க நடவடிக்கை!
வெற்றிடம் நிலவும் ஐந்து சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பதவிகளுக்காக தகுதியுடையவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெற்றிடம் நிலவும் 230 சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர்கள் மற்றும் உதவி காவற்துறை அத்தியட்சகர்கள் பதவிகளுக்காகவும் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஜனாதிபதியின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.