சூடுபத்தினசேனை மயானத்தில் நேற்று 14 கொவிட் சடலங்கள் அடக்கம்
இலங்கையில் கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை மயானத்தில் நேற்றைய தினம் 14 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றால் மரணத்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சூடுபத்தினசேனை மயானத்தில் இதுவரை 301 கொவிட்-19 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.