சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது!

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது!

நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலாபம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் ஒருவர் நேற்றை தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மகள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.