வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

 

மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான வரி பத்திரங்கள் வழங்குவது ஜூன் 06 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமையை அடிப்படையாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை காலாவதியான வாகன வருமான வரி பத்திரங்களை புதுப்பிக்கும்போது ஜூன் 30 ஆம் திகதி வரை அபராதம் விதிக்கப்படாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.