வீட்டிலிருந்து தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் :தகவல் தருமாறு காவல்துறை அறிவிப்பு
பொரளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட இலக்கம் 63/17 மெகஸின் வீதியில் வசிக்கும் நபரொருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இவர் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கு பொரளை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதியன்று இவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரை ஒரு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல பொரளை காவல்துறையும் சுகாதார அதிகாரிகளும் நேற்று (28) அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
எனினும் குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 28 வயதுடைய சங்கீத் தனுஷ்க எனும் நபர் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 011 26 94 019 , 071 85 91 587 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொரளை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
