கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1324 ஆக பதிவானது

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1324 ஆக பதிவானது

இலங்கையில் கொவிட்- 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1324 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் 39 பேரின் மரணங்களை கொவிட் மரணங்களாக உறுதிப்படுத்தி நேற்றையதினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை வெளியிட்டார்.

அந்த மரணங்களில் 3 மரணங்கள் நேற்று இடம்பெற்றவை.

அத்துடன் ஏப்ரல் 29ஆம் திகதி முதல், மே மாதம் 27 ஆம் திகதி வரையில் 36 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியாக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நேற்று பதிவான 39 மரணங்களில், 35 மரணங்கள் கொவிட் நியூமோனியா நிலைமையால் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் 3 பேர் வீட்டிலேயே மரணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.