கிழக்கில் கொவிட் சிகிச்சைக்காக ஆயுர்வேத - அலோபதி முறை சிகிச்சை நிலையம் திறப்பு!
கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுனர் அநுராத யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த சிகிச்சை நிலையம் கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர சு.ஸ்ரீதரனின் வழிகாட்டலிலும், கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் சு. நிரஞ்சனின் மேற்பார்வையிலும் குறித்த வைத்தியசாலையில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
50 படுக்கைகளுடன் கூடிய இந்த சிகிச்சை நிலையத்தில் ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமையில் கொவிட்-19 நோயாளர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன.