5,000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை கொள்ளையிட்ட 6 பேர் கைது
பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டப்பகுதியில் 5,000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்வகந்தை தோட்டப்பகுதியில் வசிக்கும் 376 பேருக்கு நேற்றைய தினம் 5,000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 24 பொதிகள் தோட்டத்தின் தேயிலை நிறுக்கும் பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
அதனை பாதுகாப்பதற்காக காவலாளி ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில, நேற்றிரவு ஆறு பேர் கொண்ட குழுவினர், குறித்த பொதிகளை முச்சக்கரவண்டியில் ஏற்றிச்செல்ல முயற்சித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் அறிந்த தோட்ட மக்கள் குறித்த குழுவினரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.