கொவிட்- 19 சிகிச்சை முறைமைகள் தொடர்பில் பயிற்சிகள்!
கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகளின் பணிக்குழாமினருக்கு விசேட கொவிட்-19 சிகிச்சை முறைமைகள் தொடர்பில் பயிற்சியளிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்த பயிற்சி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 விசேட செயலணியின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டம் சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் முதலீட்டு வலயங்களில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.