இலங்கையில் இதுவரையில் 15 இலட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதல் சொட்டு
நாட்டில் நேற்று (27) மாத்திரம் 41,939 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியின் முதலாவது சொட்டு போடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 563,409 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 421 பேருக்கு கொவிசீல்ட் (Covishield) தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு போடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 341,962 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு போடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரை 1,503,599 பேருக்கு முதலாவது சொட்டு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.