பராமரிப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுபத்தப்பட்டுள்ளதாக மின் உற்பத்தி நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தற்காலிக இடைநிறுத்தம் மின் விநியோகத்தை பாதிக்காது என மேலும் தெரிவித்தார்.
நுரைச்சோலை மின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து மேலும் கூறுகையில்,
எரிபொருளால் இயக்கப்படும் ஒரு மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து நிலவும் மழை காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் தேவையானளவு மின்சாரத்தை வழங்கும்.
இதற்கிடையில் சுமார் 177,000 பேருக்கு நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோருக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 9,800 பேருக்கான இணைப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.