நேற்று (27) பதிவான தொற்றாளர்களின் விபரம் மாவட்ட ரீதியாக

நேற்று (27) பதிவான தொற்றாளர்களின் விபரம் மாவட்ட ரீதியாக

நாட்டில் நேற்றையதினம் கொவிட்-19 தொற்று உறுதியான 2,584 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் 429 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் 415 பேருக்கும், களுத்துறையில் 356 பேருக்கும், நுவரெலியாவில் 162 பேருக்கும், இரத்தினபுரியில் 156 பேருக்கும், காலியில் 155 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கண்டியில் 35 பேருக்கும், குருநாகலில் 32 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 64 பேருக்கும், கேகாலையில் 58 பேருக்கும், புத்தளத்தில் 31 பேருக்கும், அநுராதபுரத்தில் 53 பேருக்கும், மாத்தறையில் 81 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

பொலன்னறுவையில் 7 பேருக்கும், அம்பாறையில் 15 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 79 பேருக்கும், பதுளையில் 46 பேருக்கும், மட்டக்களப்பில் 68 பேருக்கும், மொனராகலையில் 55 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கிளிநொச்சியில் 29 பேரும், முல்லைத்தீவில் 35 பேரும், திருகோணமலையில் 95 பேரும், மாத்தளையில் 81 பேரும், வவுனியாவில் 24 பேரும், மன்னாரில் 11 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.No description available.