நடமாட்டக் கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஆரம்பமானது!

நடமாட்டக் கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஆரம்பமானது!

நாடு முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் கொவிட்19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது.

எதிர்வரும் 7 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு அமுலாக்குவதா? இல்லையா? என்று இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

கடுமையான நடமாட்டக்கட்டுப்பாடு அமுலப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியின் இடைநடுவே, கடந்த 25 ஆம் திகதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.

இந்த காலப்பகுதியினுள் பொதுமக்கள் நடத்தைக் கோலம் மகிழ்ச்சியடையக் கூடிய வகையில் இல்லை என பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவுகள் சுட்டிக்காட்டியிருந்தன.

எனவே, எதிர்வரும் காலங்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ள இரு தினங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு அதற்கமைய, பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவு கோரியிருந்தது.

எனினும், இது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், தற்போது இடம்பெறும் ஜனாதிபதி மற்றும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலின்போது, இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.