தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்  சிலர் விடுவிக்கப்பட்டதுடன், சிலர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அதேநேரம், மேல் மாகாணத்தில் நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்ட 700 வாகனங்களில் 39 வாகனங்கள் எவ்வித அத்தியாவசிய காரணங்களுமின்றி பயணித்தவை என அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து அந்த வாகனங்களில் பயணித்தவர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 3000 க்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அநாவசியமாக பயணித்த 27 முச்சக்கர வண்டிகள் காவற்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

அதேநேரம் மேல் மாகாணத்திலிருந்து 68 பேர் பிற மாகாணங்களுக்கு செல்ல முயற்சித்தபோது திருப்பி அனுப்பப்பட்டதாகவும் காவற்துறை பேச்சாளர் தெரிவித்தார்.