பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் கைது!

பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் கைது!

நாடளாவிய ரீதியில் கடும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரும், மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரும் நோர்வூட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் - அயரபி தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 10 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேநேரம், ஸ்டொக்கம் தோட்டத்தை சேர்ந்த இருவர் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்டிருந்த உபகரணங்களும் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கைதான மூவரும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.