எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில்! (படங்கள்/ காணொளி)

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில்! (படங்கள்/ காணொளி)

 

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல் மற்றும் ட்ரோன் விமானம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக இவ்வாறு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதனை காணக்கூடியதாய் உள்ளதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய - இலங்கை கூட்டு நடவடிக்கையின் அனுகூலமான விளைவை இன்னும் சில மணி நேரங்களில் எதிர்பார்க்கலாம் என அப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.