கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்பினர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை
இலங்கையை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு ஊடாக பேருவளை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதேநேரம் பேருவளை முதல் காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தொட்டை வரையான கடற்பிரதேசங்களில் இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.
புத்தளம் முதல் கொழும்பு ஊடாக பேருவளை வரையான கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படக்கூடுவதுடன், பேருவளை முதல் காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தொட்டை வரையான கடற்பிரதேசங்கள் இடைக்கிடையில் மிகவும் கொந்தளிப்பாக நிலவக்கூடும்.
கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்பினர் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், எதிர்வு கூறியுள்ளது.