கோவில் பொருட்களை திருடிய சந்தேக நபர்கள் ஐவர் கைது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கோவில்களில் உள்ள பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இவ்விரு கோவில்களினதும் பொருட்கள் திருடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 12 இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் வவுனியாவிலுள்ள பூவரசங்குளம் மற்றும் தாலிகுளம் பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஐவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.