கப்பலில் ஏற்பட்ட தீ இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை

கப்பலில் ஏற்பட்ட தீ இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் தீப்பிடித்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலிலிருந்து வெளியாகும்  தீப்பிழம்புகளின் அளவு தற்போது குறைந்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கப்பலில் தீப்பரவல் குறைவடைந்து வருவதை இன்று காலை காணக்கூடியதாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று காரணமாக தீயை இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதுள்ளது.

இதனால் கப்பல் இன்னும் ஆபத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.