இரண்டாவது தொகுதி சினோபாம் தடுப்பூசிகளை இன்று முதல் செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை!
சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி சினோபாம் தடுப்பூசிகளை இன்று முதல் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த தடுப்பூசி தொகை சுகாதார துறைகளின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளித்து நாட்டின் சில மாவட்டங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் இரண்டாவது தொகுதி சினோஃபாம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன.