கிளிநொச்சி - பூநகரியில் யானை தாக்கி தம்பதி பலி!

கிளிநொச்சி - பூநகரியில் யானை தாக்கி தம்பதி பலி!

கிளிநொச்சி - பூநகரி - ஜெயபுரத்தில் உந்துருளியில் பயணித்த நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது மனைவியும் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளமை மரண விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முழங்காவில் பகுதியை சேர்ந்த 52 வயதான பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகரும், 50 வயதான அவரது மனைவியுமே பலியாகினர்.

கிராம அலுவலகர் சம்பவ இடத்திலும் அவரது மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் கிராம அலுவலகரின் மனைவியின் மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது யானை தாக்கியதற்கான அடையாளங்கள் உடலில் காணப்பட்டதாக திடீர் மரண விசாரணை அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.