மின்சார துண்டிப்பினால் 76,000 பேர் பாதிப்பு!

மின்சார துண்டிப்பினால் 76,000 பேர் பாதிப்பு!

பலத்த காற்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பினால் 76,000 பயனாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர், சுலக்ஷன ஜயவர்தன எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

இதன்படி தம்புள்ளை, கேகாலை, பலாங்கொடை, இரத்தினபுரி, ஹொரணை, இங்கிரிய, குருநாகல் மற்றும் குளியாபிட்டி ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.