கொத்மலை நீரத்தேக்கத்துக்கு அருகிலுள்ள வீதியின் ஒரு பகுதி தாழிறக்கம்!
கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு பிரவேசிக்கும் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.
இதனால், நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என நீர்த்தேக்கத்தின் கட்டுமாண பணிகளுக்கு பொறுப்பான பொறியியலாளர் ஆர்.எம்.எஸ். வத்சல தெரிவித்தார்.
இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த வீதி புனரமைக்கப்படும் வரையில் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ள 6 அடி ஆழமான பகுதி இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொத்மலை நீர்த்தேகத்தை அண்மித்த பகுதிகளில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

