மாட்டுத் தொழுவத்தில் மறைத்துவைத்து ஹெரோயின் விற்பனை செய்தவர் சிக்கினார்!
காலி- ஹின்பெந்தல பகுதியில் 35 கிராம் 165 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மாட்டுத் தொழுவம் ஒன்றில் மறைத்து வைத்து நீண்ட நாட்களாக ஹெரோயின் விற்பனை செய்து வந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறும் காலி காவல்துறையினர், நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
இக்கோரிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் காலி பதில் நீதிவான், சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய இன்று அனுமதி வழங்கினார்.
சம்பவம் தொடர்பில் காலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.