நேற்று அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில்
நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 2 ஆயிரத்து 728 பேரில், கம்பஹா மாவட்டத்திலே அதிகளவிலானோர் பதிவாகியுள்ளனர்.
இதன்படி அந்த மாவட்டத்தில் 558 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதற்கு அடுத்தப்படியாக கொழும்பு மாவட்டத்தில் 522 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 476 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத்தறையில் 189 பேரும், கண்டியில் 133 பேரும், குருநாகலில் 121 பேரும், காலியில் 117 பேரும், மாத்தளை மற்றும் இரத்தினபுரியில் தலா 78 பேரும், யாழ்ப்பாணத்தில் 73 பேரும் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் 53 பேருக்கும், திருகோணமலையில் 43 பேருக்கும், மட்டக்களப்பில் 28 பேருக்கும், அம்பாறை மற்றும் அநுராதப்புரத்தில் தலா 31 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் 25 பேருக்கும், முல்லைத்தீவில் 23 பேருக்கும், மொனராகலையில் 22 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.