தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வாடகை வாகன சாரதிகள் 50 பேர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் அனைவரும் வாடகை வாகன சாரதிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியக் குற்றச்சாட்டில், இன்று (26) காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், 636 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை கைதுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி இதுவரையான காலப்பகுதியில் இந்த குற்றச்சாட்டில் 14,129 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவற்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.