எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பணிக்குழாம் உறுப்பினருக்கு கொவிட்!

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பணிக்குழாம் உறுப்பினருக்கு கொவிட்!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் நேற்று (25) காலை மீண்டும்  தீப்பற்றியதுடன் அதிலிருந்த இரசாயனம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த கப்பலின் பணிக்குழாமைச் சேர்ந்த இரண்டு பேர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளுக்கமைய, அவர்களில் இந்திய பிரஜையான ஒருவருக்கு கொவிட் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், இது இந்திய திரிபு வைரஸா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்காக கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் கடந்த 20 ஆம் திகதி  தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில் கடற்படை உள்ளிட்ட தரப்பினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும் நேற்று குறித்த கப்பலில் நேற்று(25) மீண்டும் தீ ஏற்பட்டது. இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை  கடற்படை, விமானப் படையினர் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.