முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டியுடன் சென்றவர் கைது!
அளுத்கம, தர்காநகர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நபரொருவர் சிறப்பங்காடி ஒன்றிலிருந்து, தள்ளுவண்டியொன்றில் பொருட்களை வைத்து தள்ளிச்செல்லும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் இன்று பகிரப்பட்டுவந்தது.
இந்நபர் முகக்கவசம் அணியாமல் குறித்த தள்ளுவண்டியை தள்ளிச்சென்றிருந்தார்.
இந்நிலையில், பொது இடத்தில் முகக்கவசம் அணிய தவறிய குற்றத்துக்கான தனிமைப்படுத்தல் சட்டத்தின் 40 வயதான குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.