வட்டவளை – பொகவந்தலாவயில் மண்சரிவால் ஆறு குடியிருப்புகள் சேதம்

வட்டவளை – பொகவந்தலாவயில் மண்சரிவால் ஆறு குடியிருப்புகள் சேதம்

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஆறு குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.

வட்டவளை காவற்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள வெளிஓயா கீழ் பிரிவில் இன்று அதிகாலை மண்மேட்டுடன் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமாகியுள்ளன.

அதேவேளை, பொகவந்தலாவை லொயினோன் தோட்டப்பகுதியில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.