பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

இன்று (25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சுமித் கொடிகார இதனை தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பத்தில் முறையாக இடம்பெற்ற போதிலும் தற்போது முன்னுரிமை பட்டியல்களை மீறி செயல்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.