அத்துருகிரிய இடைமாறல் - புதிய களனி பாலத்திற்கு இடையில் தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலை
அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனி பாலத்தையும் தொடர்புபடுத்தி தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலைக் கட்டுமானத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அதிவேக நெடுஞ்சாலையை, நிர்மாணித்து பராமரித்து ஒப்படைத்தல் முறைமையின் அடிப்படையில் மேற்கொள்வதற்காக, 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, முதலீட்டுக் கருத்திட்டத்திற்காக குறித்த முதலீட்டாளர்களின் தொழில்நுட்ப மற்றும் நிதி யோசனைகள் அடங்கிய போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக அதிவேக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.