அமெரிக்காவினால் இலங்கைக்கு 4,700 கொவிட் பரிசோதனை உபகரணங்கள் கையளிப்பு
நாட்டில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அமெரிக்காவினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான கொவிட் பரிசோதனை உபகரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த 4,700 கொவிட் பரிசோதனை உபகரணங்கள், அமெரிக்க தூதரகம் சார்பில் அமெரிக்காவின் பசுபிக் கடற்படை குழுவினால், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் மனிதாபிமான நன்கொடை மற்றும் அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.