நாளை நிழல் சந்திரக் கிரகணம்
நாளைய பௌர்ணமி தினத்தில் நிழல் சந்திரக் கிரகணத்தை இலங்கையர் கண்டுகொள்ள முடியும்.
நாளை பிற்பகல் 6.32 மணி முதல் பிற்பகல் 7.20 மணிவரை இலங்கையர்கள், தென்கிழக்கு வானில் இந்த நிழல் சந்திர கிரகணத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின், வானியல் மற்றும் வெண்வெளி ஆய்வு பிரிவின் உபாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இது 2019 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திரக் கிரகணம் ஆகும்.
அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பூரண சந்திரக் கிரணமாக இது காட்சியளிக்கும்.