தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மதுபானசாலைக்கு முத்திரையிடப்பட்டது: மூவர் கைது
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திறக்கப்பட்டிருந்த மதுபானசாலை ஒன்று மதுவரித் திணைக்களத்தினால் முத்திரையிடப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்று நண்பகல் குறித்த மதுபானசாலை சுற்றிவளைக்கப்பட்டதுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மதுபானத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
எதிர்வரும் 7ஆம் திகதி வரை மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி கோப்பாய் பகுதியில் மதுபானசாலையை திறந்திருந்த அதன் முகாமையாளரும் விற்பனையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மதுபானத்தை கொள்வனவு செய்ய அங்கு வந்திருந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.