வீடுகளில் தங்கியுள்ள கொவிட் தொற்றாளர்களுக்கான மருத்துவ வசதிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்
கொவிட் தடுப்பு செயற்பாடுகளில் இருந்து இன்றுடன் விலகி இருக்க தீர்மானித்திருப்பதாக, பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார தொழிற்துறைசார்ந்த சங்கங்கள் நேற்று (24) எச்சரிக்கை விடுத்தன.
அரச வைத்திய அதிகாரிகளது குடும்பத்தினருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கி, ஏனைய சுகாதாரத்துறை அலுவலர்கள் புறக்கணிக்கப்படுகின்றமைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கான மருத்துவ - சுகாதார வசதிகளை வீடுகளிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் நேற்று (24) ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொவிட் தொற்றுறுதியானவர்கள் குறித்த விபரங்களை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகருக்கு அறியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.