எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மேல், சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மத்திய,ஊவா,வடமத்திய,வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், குறித்த பகுதிகளில் 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அத் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.