தோணி கவிழ்ந்ததில் காணாமல்போன 16 வயது மாணவன்
காலி தெவட கடற்பகுதியில் தோணி கவிழ்ந்ததில் 16 வயது பாடசாலை மாணவர் இன்று (24) காணாமல் போயுள்ளார்.
விபத்து நடந்த நேரத்தில் தோணியில் மூன்று பேர் இருந்ததாகவும், மற்ற இருவரும் கரைக்கு நீந்தி உயிர் தப்பியதாகவும் காலி துறைமுக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தோணியில் நண்டுகளை பிடிக்க சென்றவேளை, சீரற்ற காலநிலை காரணமாக அலைகளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிய இருவருமே காலியில் உள்ள கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல்போன மாணவர் கட்டுகோடாவில் உள்ள முல்வட்டா பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.இவர்
இம்முறை கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தகக்து.